Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


3 மாதங்களுக்கு அதிமுக அரசு மீது விமர்சனம் கிடையாது-தமிழக பாஜக

Go down

3 மாதங்களுக்கு அதிமுக அரசு மீது விமர்சனம் கிடையாது-தமிழக பாஜக Empty 3 மாதங்களுக்கு அதிமுக அரசு மீது விமர்சனம் கிடையாது-தமிழக பாஜக

Post by Admin Fri Jun 24, 2011 9:19 am

சென்னை: 3 மாதங்களுக்கு அதிமுக அரசை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று மூத்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

இக்
கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திப்பது, கட்சி
வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகியவை குறித்து
விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

-சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வாழ்த்து.

-பாஜகவுக்கு கணிசமான அளவில் வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.

-தமிழ்நாட்டை
போல மத்தியிலும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் காங்கிரசை,
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

-கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

-2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கும், தொடர்பு இருப்பது
தெரியவந்துள்ளது. எனவே அவர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க
வேண்டியிருப்பதால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

-சமச்சீர்
கல்வியை அமல்படுத்துவதை பாஜக வரவேற்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள
குழுவில் கிராமபுற மாணவர்களின் நிலையை அறிந்த பிரதிநிதிகள் இடம் பெற
வேண்டும்.

-தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை
அரசே வசூலித்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தில் நடத்த இயலாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

-கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட தனியார் மற்றும் கோவில் சொத்துக்களை அரசு தனிப்படை அமைத்து அதை மீட்க வேண்டும்.

-சித்திரை
முதல் நாளை பல ஆண்டுகளாக பாரம்பரியமாக தமிழக மக்கள் தமிழ்ப் புத்தாண்டாக
கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் தன்னிச்சையாக “தை” முதல்
தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள்
ஏற்கவில்லை. எனவே, மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக
அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக
நிருபர்களி்டம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிதாகப்
பொறுப்பேற்ற அதிமுக அரசை 3 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம். பேரவையில்
பாஜகவுக்கு பிரதிநிதிகள் இல்லையென்றாலும் மக்கள் மன்றத்தில்
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும்,
சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றினாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக அரசு கடிதம்
எழுதினாலும், போராட்டங்கள் நடத்தினாலும் இலங்கை படையினரின் அட்டகாசம்
நின்றபாடில்லை. இதற்கு மத்திய அரசின் இயலாமையே காரணம்.

சட்டப்
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மாநில செயற்குழு கூட்டம்
நடைபெறுகிறது. 2006 பேரவைத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகளை இந்தத்
தேர்தலில் பெற்றுள்ளோம். பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

வரும்
உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்
தேர்தல் வரும் என்ற சூழல் உள்ளதால் அத்தேர்தல் குறித்தும் கூட்டத்தில்
விவாதிக்க இருக்கிறோம் என்றார்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தில்லியில் பாஜக ஆர்ப்பாட்டம்
»  தமிழக ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்--ஐ.தே.க
» சென்னை அருகே நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்
» கனடாவுக்கு அனுப்பிய போர் குற்றப் புத்தகங்களை இலங்கை அரசு பறிமுதல்
» 20 கிலோ இலவச அரிசி-மகப்பேறு விடுப்பு: ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு; அரசு ஊழியர்கள் வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum