Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?

Go down

கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ? Empty கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?

Post by Admin Tue Jun 14, 2011 8:56 am

Last Updated :



[You must be registered and logged in to see this image.]





சென்னை, ஜூன் 13: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர்
நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேல்முறையீடு செய்த 6,400 தனியார் பள்ளிகளுக்கான திருத்திய கட்டண நிர்ணயப்
பணிகளை முடித்தவுடன், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ராஜிநாமா கடிதத்தை தமிழக அரசுக்கு
அவர் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண
திருத்திய நிர்ணய அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை
அனுப்பப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்டண நிர்ணயக் குழு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள்
திங்கள்கிழமை சென்றனர். அங்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் அறைக்கு முன் இருந்த பெயர்ப்
பலகை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது,
அவர்கள் எதையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். நீதிபதி ராஜிநாமா குறித்து
தங்களுக்கு எதுவுமே தெரியாது என கல்வித் துறை அதிகாரிளும் மறுத்துவிட்டனர்.
கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவருக்கு அரசு வழங்கியிருந்த வாகனத்தையும்
அவர் திருப்பி வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது தலைவர் ராஜிநாமா: தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு நீதிபதி
கோவிந்தராஜன் தலைமையில் 07.12.2009-ம் தேதி அமைத்து அரசு உத்தரவிட்டது.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை
நிர்ணயத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து
ஏறத்தாழ 6,400 பள்ளிகள் நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்தன.
ஏறத்தாழ 10 மாதங்கள் பணியாற்றிய பிறகு, நீதிபதி கோவிந்தராஜன் தனது உடல் நலன்
கருதி, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். அதன்பிறகு,
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை இந்தக் குழுத் தலைவராக நியமித்து
தமிழக அரசு 30.10.2010-ம் தேதி உத்தரவிட்டது.
அந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டபோது அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக் காலம்
இருந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4 வரை மேல்முறையீடு செய்த 6
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் இவர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
பள்ளிகள் திறக்கும் தேதியான ஜூன் 15-ம் தேதிக்குள் மறுகட்டண நிர்ணய அறிவிப்பு
வெளியாக வேண்டும் என்பதற்காக இந்தக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வந்தனர். இந்த
நிலையில், ஜூன் 13-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்விக் கட்டண
மறுநிர்ணய உத்தரவுகள் அனுப்பப்பட்டன.
இந்தப் பணிகள் முடிவடைந்த நேரத்தில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை
ராஜிநாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன? நீதிபதி ரவிராஜபாண்டியனுக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு மேல் பதவிக்
காலம் உள்ள நிலையில் அவரது ராஜிநாமாவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தி.மு.க. அரசால் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

இப்போது அ.தி.மு.க. அரசு பதவியேற்றிருப்பதால், தனது பணிகள் முடிந்ததும்
பதவியிலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum