Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

Go down

6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது Empty 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

Post by Admin Mon Jun 13, 2011 6:14 pm

சென்னை, ஜூன். 13-

[You must be registered and logged in to see this image.]தனியார் பள்ளிகள் அதிக
கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து
கல்வி கட்டணத்தை முறைப் படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன்
தலைமையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ்நாட்டில் உள்ள 10,954
தனியார் பள்ளிக்களுக்கான கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ணயித்தது.

இந்த
கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த
இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.

இதையடுத்து
சென்னை ஐகோர்ட்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. மேல் முறையீடு செய்த
தனியார் பள்ளிகளுக்கு நேரடி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு அளிக்குமாறு
கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் நீதிபதி
கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின்
கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன்
நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை
நடத்தினார்.

மழலையர், தொடக்க, நடு
நிலைப்பள்ளிகளுக்கு முதல் கட்டமாக விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து
உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கும் ஆய்வு நடந்தது. கடந்த மாதம்
4-ந் தேதி ஆய்வு முடிக்கப்பட்டது.

இந்த நிலையில்
தனியார் பள்ளிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கட்டண குறித்த
அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள
அலுவலகத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் தனி அலுவலர்
திருஞானசம்பந்தம் புதிய கல்வி கட்டண குறித்த அறி விப்பை வெளியிட்டார். இது
தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீதிபதி
ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய
கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பள்ளி அமைவிடம், மாணவர்கள்
எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர், பணியாளர் ஊதியம், நிர்வாக
பராமரிப்பு செலவுகள் அனைத்தும் மறு கட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

2010-11,
2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மறு கட்டண
நிர்ணய ஆணை அமைந்துள்ளது. இந்த கட்டண நிர்ணய சட்டத்தின் படி அங்கீகாரம்
உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தொடர் அங்கீகாரத்துக்கு
விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மறு கட்டண நிர்ணயம் செய்ய பெற்று இருந்தாலும்
அங்கீகாரம் பெற்ற பின்னரே அது பொருந்தும். அங்கீகாரகாலம் நிறைவடைந்து 3
ஆண்டு காலம் கடந்தும் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத
பள்ளிகளுக்கும், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் மறு நிர்ணயம்
செய்யப்படவில்லை.

மேலும் இத்தகைய பள்ளிகளுக்கு
7-5-2010ல் குழு அளித்த நிர்ணய ஆணையும் தற்போது நீக்கம் செய்யப்படுகிறது.
மத்திய- மாநில அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி
நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு பொருந்தாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள்,
ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஒரு
பகுதி அரசு நிதி உதவி பெற்று ஒரு பகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும்
பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளிகள் கீழ் வருகிறது. அவற்றுக்கு இந்த
புதிய கல்விக் கட்டணம் பொருந்தும். தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக்
கட்டணம் குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம்
வெளியிடப்படுகிறது.

தனியார் பள்ளிகள், முதன்மை
கல்வி அதிகாரி அலுவலகத்தில் கட்டண விவரம் குறித்த தகவலை பெற்றுக்
கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரம்
விரைவில் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை
மாவட்டத்தில் 430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 230 பள்ளிகள் மேல்
முறையீடு செய்தன. அவற்றுக்கு புதிய கல்வி கட்டணம் பொருந்தும். புதிய கல்வி
கட்டணம் 15 சதவீத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கலாம்
என்றும் கூறப்படுகிறது
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?
» "காஸ்ட்லி'யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்
» போர்க்குற்றம் தொடர்பில் எமது தரப்பு நியாயங்களை கூற ஐ.நா குழு, வாய்ப்பளிக்க வேண்டும் - வி.புலிகள்
» சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..!
» புதிய வசதிகளுடன் Skype (Beta) 5.5

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum