Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போவாரா?; நடிகர் தனுஷ் பேட்டி
Page 1 of 1

சென்னை, மே.17-
நடிகர்
ரஜினிகாந்த் சுவாச குழாய் தொற்று நோய் கிருமி தாக்குதல் (ரெஸ்பிரேட்டரி
இன்பக்ஷன்), வயிற்றில் குடல் பிரச்சினைகள் ஆகிய கோளாறுகளால் கடந்த சில
வாரங்களாக அவதிப்படுகிறார். இதற்காக, அவர் முதலில் சென்னை இசபெல்லா
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 13-ந்
தேதி அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து
சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியின்
7-வது மாடியில் உள்ள ஒரு விசேஷ வார்டில், ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு
இருக்கிறார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா,
சவுந்தர்யா ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். வார்டு அருகே ஒரு சமையல் அறை
உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய நோயாளிகளுக்கு மட்டுமே
ஒதுக்கப்படுகிற வார்டு அது என்று கூறப்படுகிறது.
அனுமதி
இல்லாமல் டாக்டர் கூட அங்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. அவருக்கு காரமில்லாத உணவு கொடுக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி சார்பில் நேற்று ஒரு செய்தி
குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
``நடிகர்
ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை சுவாசக்குழாய் தொற்றுநோய் கிருமிகள்
மற்றும் காய்ச்சல் காரணமாக, ராமச்சந்திரா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர் முழுமையாக குணம் அடைந்து பழைய நிலையை அடையும்வரை ஆஸ்பத்திரியிலேயே
தங்கியிருந்து சிகிச்சை பெறும்படி ஆலோசனை கூறியிருக்கிறோம்.
விசேஷ
மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு
அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவர் உடல் நிலை முழுமையாக
ஆராயப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஒரு தனி வார்டில்,
மகிழ்ச்சிகரமாக இருக்கிறார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவை
அவருக்கு சீராக உள்ளது. அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு இருப்பதால்
பார்வையாளர்களை தவிர்க்கும்படியும், முழுமையான ஓய்வு
எடுத்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'' இவ்வாறு அந்த
செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை நேற்று மாலை 3-30 மணிக்கு, தெலுங்கு
தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பார்த்தார். 10 நிமிடங்கள் கழித்து
வெளியே வந்த அவர், நிருபர்கள் மத்தியில் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி
பேசினார். அவர் கூறியதாவது:- ``ரஜினிகாந்த் என் நீண்டகால நண்பர்.
அவர்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து இங்கு வந்து
பார்த்தேன். ரஜினிக்கு சுவாச குழாயில் பிரச்சினை இருக்கிறது. இப்போது அவர்
குணம் அடைந்து வருகிறார். அவருடன் நான் பேசினேன். என்னிடம் அவர் பேசினார்.
அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு
செல்வது பற்றி என்னிடம் பேசவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்று
கருதுகிறேன்.''
இவ்வாறு சந்திரபாபு நாயுடு
கூறினார். சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து குஜராத் முதல்- மந்திரி நரேந்திர
மோடி, நேற்று மாலை 3-50 மணிக்கு போரூர் ஆஸ்பத்திரிக்கு வந்து ரஜினிகாந்தை
பார்த்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் இல.கணேசன்,
பத்திரிகையாளர் சோ ஆகிய இருவரும் வந்தார்கள். ரஜினிகாந்தை பார்த்துவிட்டு
சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நரேந்திர மோடி, நிருபர்கள்
மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
``ரஜினிகாந்தை
நான் பார்த்து பேசினேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். கோடை
விடுமுறைக்காக வந்திருப்பது போல் உற்சாகமாக காணப்பட்டார். என்னிடம்,
ஜாலியாக `ஜோக்' அடித்து பேசினார். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
ரஜினிகாந்த் உடல்நலத்துடன் சீக்கிரமே வீடு திரும்ப வேண்டும் என்று நான்
பிரார்த்திக்கிறேன்.
'' மேற்கண்டவாறு நரேந்திர மோடி
கூறினார். சோ கூறும்போது, ``என்னைப்போன்ற நண்பர்கள் தொந்தரவை
தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கிறார். அவர்
நலமாக இருக்கிறார்'' என்றார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவருடைய மருமகன்
நடிகர் தனுஷ், பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்
கூறியதாவது:-
``சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக
இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன்
காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம்
அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை. ரஜினிகாந்த் பற்றிய
வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது.
அதற்காகவே
ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த
வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார்.
வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார். அவர் உடல்நலம் பெற
வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.''
இவ்வாறு தனுஷ் கூறினார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நேற்று காலை முதலே
மோசமான வதந்தி பரவியது.
சில இணையதளங்களில் தவறான
தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்,
ரஜினிகாந்தின் ரசிகர்கள் திரண்டனர். வெளிïர்களில் இருந்து நூற்றுக்கணக்கான
ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். அவர்களை கலைந்து செல்லும்படி ஆஸ்பத்திரி
ஊழியர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்ல
மறுத்ததுடன், ``எங்கள் தலைவரை பார்த்துவிட்டுத்தான் செல்வோம்.
அவரை
ஜன்னல் வழியாக கைகாட்ட சொல்லுங்கள். போய்விடுகிறோம்'' என்று கூறினார்கள்.
சில ரசிகர்கள் வாய்விட்டு கதறி அழுதார்கள். அவர்களை போலீசார்
சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

Similar topics
» சென்னை அருகே நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின் மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum