Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி

Go down

"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி Empty "கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி

Post by Admin Wed May 18, 2011 10:56 am

[You must be registered and logged in to see this image.]


"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி
தர்மசாலா:
ஐ.பி.எல்., லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் அதிரடி சதம் விளாச, பஞ்சாப் அணி
111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில்
சொதப்பிய பெங்களூரு அணி பரிதாபமாக வீழ்ந்தது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20'
தொடரின் 63வது லீக் போட்டி, தர்மசாலாவில் நடந்தது. இதில் கில்கிறிஸ்டின்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராத் கோஹ்லியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்
பேட்டிங் தேர்வு செய்தார்.
வல்தாட்டி ஏமாற்றம்:
பஞ்சாப்
அணிக்கு வல்தாட்டி, கில்கிறிஸ்ட் இணைந்து துவக்கம் கொடுத்தனர்.
லாங்கிவெல்ட் பந்தில் ஒரு சிக்சர் அடித்த வல்தாட்டி 20 ரன்னுடன்
திரும்பினார். இதன் பின் கில்கிறிஸ்ட்டுடன், ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.
"பெஸ்ட்' ஜோடி:
துவக்கத்தில்
சற்று பொறுமை காத்த இவர்கள், போகப் போக பெங்களூரு பவுலர்களை ஒரு "கை'
பார்க்கத்துவங்கினர். கில்கிறிஸ்ட், மார்ஷ் இருவரும் மாறி, மாறி பவுண்டரி,
சிக்சர்களாக விளாசினர். கெய்ல் பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு
அனுப்பிய "கில்லி', லாங்கிவெல்ட் ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து
மிரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

6 பந்து 30 ரன்:
மறுமுனையில்
மார்ஷ் தன் பங்கிற்கு ரன்மழை பொழிந்தார். வான் டர் வாத்தின் ஒரே ஓவரில் 3
சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 ரன்கள் குவித்து, அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அசத்திய கில்கிறிஸ்ட், ஐ.பி.எல்., தொடரில் 2வது சதம் கடந்தார்.
இவர் 55 பந்துகளில் 106 ரன்கள் (9 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து
அவுட்டானார்.
20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 2 விக்கெட்டுக்கு
232 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 79 ரன்னுடன் (49 பந்து, 5 சிக்சர், 7
பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
கெய்ல் "டக்':
எட்டமுடியாத
இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கெய்ல் இம்முறை "டக்' அவுட்டாகி
அதிர்ச்சி தந்தார். நான்காவது ஓவரில் பெங்களூரு அணிக்காக முதல் பவுண்டரி
அடித்த கேப்டன் விராத் கோஹ்லி (11) நிலைக்கவில்லை. சவுரப் திவாரி (6),
ஆசாத் பதான் (7) அடுத்தடுத்த ஓவர்களில் திரும்ப, 43 ரன்னுக்கு 4
விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி திணறியது.
இதன் பின்
டிவிலியர்ஸ், முகமது கைப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும்
முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கைப் 11 ரன்னுக்கு அவுட்டாக, அணியின்
தோல்வி உறுதியானது. டிவிலியர்ஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

பின் வந்த "டெயிலெண்டர்கள்' அருண் கார்த்திக் (6), வான் டர் வாத் (4),
அபிமன்யு மிதுன் (10), லாங்கிவெல்ட் (Cool விரைவில் திரும்பினர். பெங்களூரு
ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 17 ஓவரில் 121 ரன்னுக்கு சுருண்டு, 111 ரன்கள்
வித்தியாத்தில் தோல்வியடைந்தது. அரவிந்த் (11) அவுட்டாகாமல் இருந்தார்.
பஞ்சாப்
அணி சார்பில் சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா 4, ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை
வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கில்கிறிஸ்ட் தட்டிச் சென்றார்.
இதையடுத்து கடந்த 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த, பெங்களூரு
அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

சூப்பர் ஜோடி
பெங்களூரு
ராயல் சாலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை பதம்பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணியின் கில்கிறிஸ்ட்-மார்ஷ் ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள்
சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும்
அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக
கடந்த 2008ல், டெக்கான் அணிக்காக விளையாடிய கில்கிறிஸ்ட்-லட்சுமண் ஜோடி
முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
*
தவிர இந்த ஜோடி, சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி
என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2006ல், சாமர்சட் அணிக்காக விளையாடிய
ஜஸ்டின் லாங்கர்-கேமிரான் ஒயிட் ஜோடி 186 ரன்கள் (எதிர்-குளோவ்சஸ்டர்ஷயர்)
சேர்த்தது.

இரண்டாவது வீரர்
பெங்களூரு
அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி கேப்டன்
கில்கிறிஸ்ட், 55 பந்தில் 9 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 106 ரன்கள்
குவித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் இரண்டு முறை சதம் கடந்த
இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக, கடந்த 2008ல் டெக்கான்
அணிக்காக விளையாடிய கில்கிறிஸ்ட், மும்பை அணிக்கு எதிராக 109 ரன்கள்
எடுத்தார். தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெய்ல்,
இத்தொடரில் கோல்கட்டா (102), பஞ்சாப் (107) அணிகளுக்கு எதிராக தலா ஒரு
முறை சதம் அடித்தார்.

மூன்றாவது இடம்
பெங்களூரு
அணிக்கு எதிராக ரன் வேட்டை நடத்திய பஞ்சாப் அணி, 20 ஓவரில் 2
விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில்,
ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையில் மூன்றாவது இடம்
பிடித்தது. முதலிரண்டு இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
(246/5-ராஜஸ்தான், 240/5-பஞ்சாப்) கைப்பற்றியது.
* தவிர இது, இம்முறை
பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக
டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

"சிக்சர் மன்னன்' கில்கிறிஸ்ட்
பெங்களூரு
அணிக்கு எதிராக 9 "சிக்சர்' விளாசிய பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்,
ஐ.பி.எல்., அரங்கில் அதிக "சிக்சர்' அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம்
பிடித்தார். இதுவரை 59 போட்டிகளில் விளையாடிய கில்கிறிஸ்ட், 80 "சிக்சர்'
விளாசினார். கோல்கட்டா அணியின் யூசுப் பதான் (72), சென்னை அணியின் சுரேஷ்
ரெய்னா (69) "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

ஸ்கோர்போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வல்தாட்டி(கே)திவாரி(ப)லாங்கிவெல்ட் 20(17)
கில்கிறிஸ்ட்(கே)கெய்ல்(ப)லாங்கிவெல்ட் 106(55)
மார்ஷ்-அவுட் இல்லை- 79(49)
ஹசி-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 27
மொத்தம் (20 ஓவரில், 2 விக்.,) 232
விக்கெட் வீழ்ச்சி: 1-25(வல்தாட்டி), 2-231(கில்கிறிஸ்ட்).
பந்து
வீச்சு: வான் டர் வாத் 4-0-50-0, லாங்கிவெல்ட் 4-0-48-2, கெய்ல் 4-0-35-0,
அரவிந்த் 4-0-36-0, அபிமன்யு மிதுன் 3-0-29-0, விராத் கோஹ்லி 1-0-13-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல்(கே)கில்கிறிஸ்ட்(ப)ஹாரிஸ் 0(7)
திவாரி(கே)ஹசி(ப)ஸ்ரீவஸ்தவா 6(11)
கோஹ்லி(கே)கார்த்திக்(ப)ஹாரிஸ் 11(11)
டிவிலியர்ஸ்(கே)கில்கிறிஸ்ட்(ப)சாவ்லா 34(27)
பதான்(கே)ஹசி(ப)வல்தாட்டி 7(4)
கைப்(ஸ்டம்டு)கில்கிறிஸ்ட்(ப)சாவ்லா 15(11)
அருண்(ப)சாவ்லா 6(6)
வான் டர்-எல்.பி.டபிள்யு(ப)சாவ்லா 4(5)
மிதுன்(கே)ஹசி(ப)ஹாரிஸ் 10(7)
லாங்கிவெல்ட்(ப)ஸ்ரீவஸ்தவா 8(Cool
அரவிந்த்-அவுட் இல்லை- 11(5)
உதிரிகள் 9
மொத்தம் ( 17 ஓவரில், ஆல் அவுட்) 121
விக்கெட்
வீழ்ச்சி: 1-4(கெய்ல்), 2-17(விராத் கோஹ்லி), 3-34(சவுரப் திவாரி),
4-43(ஆசாத் பதான்), 5-72(கைப்), 6-88(அருண் கார்த்திக்),
7-89(டிவிலியர்ஸ்), 8-95(வான் டர் வாத்), 9-103(அபிமன்யு மிதுன்),
10-121(லாங்கிவெல்ட்).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 3-1-11-0, ஹாரிஸ் 3-0-28-3, ஸ்ரீவஸ்தவா 3-0-30-2, வல்தாட்டி 4-0-30-1, பியுஸ் சாவ்லா 4-0-17-4.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum