Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?
Page 1 of 1

தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில்
ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள்,
அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும்
என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு
விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும்,
அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள்,
அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு
அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை
பெற்று தந்தது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும்
தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின்
வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில
மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ்,
தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி
வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு
முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில்
குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு
நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள்,
உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின்
சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து
விட்டனர்.
சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு
மேல் சொத்து வாங்குபவர்களிடம், "குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே,
பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று மிரட்டி வசூல் வேட்டையில்
ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும்,
குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை
மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும்
தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு
எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம்
மாற்றினர்.
பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட
முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ்
பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள்
எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே
பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட்
தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த
கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது.
தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும்,
ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல... தி.மு.க.,வுக்கு எதிரான
ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே
நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய
நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர்,
அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம்
செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது
தான், தி.மு.க., மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர்
கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு
யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற
முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால்,
தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum