Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வுby Admin Sat Jul 21, 2012 8:47 pm
» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm
» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm
» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm
» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am
» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am
» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm
» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm
» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm
» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm
» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm
» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm
» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm
» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm
» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm
» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm
» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm
» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm
» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm
» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm
» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm
பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!
Page 1 of 1
பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!
[You must be registered and logged in to see this link.]
இது [You must be registered and logged in to see this link.]!
இதைப்படித்துப் பார்த்துவிட்டு, இன்று ஜூனியர் விகடனில்
வெளியாகி இருக்கும் சேலத்து சிங்கத்தின் ஆதரவாளர்கள் போட்ட ஆட்டத்தைப்
பற்றிய ரன்னிங் கமெண்டரியைப் படியுங்கள்! முதலில் இப்போதைய செய்தி!
தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் காவல் துறையினர் இன்று திடீரென கைது செய்துள்ளனர்.
நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்ததைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த
முன்பிணை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு நாட்கள்
வீரபாண்டி ஆறுமுகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்த
வேண்டும் என்றும் 27ஆம் தேதி முன்பிணை பெற்றுக் கொண்டு
தினமும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்து போட
வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதைத்
தொடர்ந்து 3 நாள் காவல்துறை விசாரணைக்கு பின்னர் சேலம்
மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம்
தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்த நிலையில் முன்பிணை நிபந்தனைபடி கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.உதவியாளர் நடேசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட புகாரில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இனி ஜூனியர் விகடன் செய்தி!
வீரபாண்டி ஆறுமுகம் உள்ளே..'ஜெயலலிதா'வுக்கு நடந்த அவமானம் வெளியே..
சேலம் ரிலே! (ரிலே ரேஸ் நல்லாத்தான் நடக்குதுங்கோ!!)
'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில்
சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து,
100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர்.
நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது
போலீஸ்!
வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில்,
சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்பதாகவே இருந்தன.
முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!
வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே
இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு
முன்னால் தயங்கிக்கொண்டு நின்றாராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க...
உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை.
வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவிதமான உணவுகளை
சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம்.
இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக்
காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.
[You must be registered and logged in to see this image.]
விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம்
ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120
கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர்
பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான
கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது.
சில
கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ
பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம்.
எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க.
சில நேரங்களில், 'கேமராவை
ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார்.
'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா
ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில்
தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம்
பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே
மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூடவைத்தார்கள்.
விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே
தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி
நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக்
கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப் படுத்தினார்கள்.
உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை,
அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான
போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி
கேட்கவோ இல்லை.
சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ?
அராஜகம்!
கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த
ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு
ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில
டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ்
கண்டு கொள்ளவில்லை.
கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி
வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று
நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி.
மறு உத்தரவு வரும் வரை, தினமும்
சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட
வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி
காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி
அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம்
மனம்விட்டுப் பேசினர்.
'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ்
விசாரித்த போது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக்
கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க.
அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான்
இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லி விட்டு
வந்தாராம் அழகிரி!
- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்--நன்றி : ஜூனியர் விகடன்
சொந்தக் கதையே எங்கே எப்போது என்னவாகுமோ
என்று கோழிக் குஞ்சுக்குப் படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருக்கிற கதையாக இருக்கும் போது இவர் போய் தைரியம் சொல்லிவிட்டு வந்தாராம்! தமாஷாக இல்லை?!
ஆட்டம் போட்ட உளுத்தம்பருப்புக்களைக் காவல்துறை, வீடியோவில் படம் எடுத்து அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் பள்ளிகளை மூடச் சொல்லி,
மாணவர்களைத் தூண்டி விட்டுத் திமுகவினர் நேற்று நடத்திய போராட்டம்
பிசுபிசுத்தது. மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மேயர்,
துணைமேயர் உள்ளிட்டு நேற்று வரை ஒட்டிக் கொண்டு ஆதாயம் பார்த்தவர்கள்
பலரையும் காணோம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum