Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


மாரடைப்பும் பெண்களும்

Go down

மாரடைப்பும் பெண்களும்  Empty மாரடைப்பும் பெண்களும்

Post by manju Tue Jun 28, 2011 7:38 pm

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

[You must be registered and logged in to see this image.]

கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?

பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

மாரடைப்பும் பெண்களும்  Empty Re: மாரடைப்பும் பெண்களும்

Post by manju Tue Jun 28, 2011 7:39 pm

[You must be registered and logged in to see this image.]

பெண்கள்
தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக
உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின்
வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical)
வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

மாரடைப்பும் பெண்களும்  Empty Re: மாரடைப்பும் பெண்களும்

Post by manju Tue Jun 28, 2011 7:39 pm

[You must be registered and logged in to see this image.]

அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95%
சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில்
சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி

பெண்கள்
அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம்.
பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச்
சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன்
வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்

போதாக்குறைக்கு
ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம்
வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு
அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?

பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு,
அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது
போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.
[You must be registered and logged in to see this image.]

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

மாரடைப்பும் பெண்களும்  Empty Re: மாரடைப்பும் பெண்களும்

Post by manju Tue Jun 28, 2011 7:39 pm

அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு
மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து,
அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து
செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும்
தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

manju

Posts : 43
Join date : 22/06/2011

Back to top Go down

மாரடைப்பும் பெண்களும்  Empty Re: மாரடைப்பும் பெண்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum