Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
by Admin Sat Jul 21, 2012 8:47 pm

» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு
by Admin Sun Jul 01, 2012 7:08 pm

» இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video
by Admin Sun Jul 01, 2012 6:54 pm

» tamil eelam Flag History video
by Admin Sun Jul 01, 2012 6:28 pm

» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு
by Admin Wed Aug 24, 2011 9:24 am

» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
by Admin Wed Aug 24, 2011 9:23 am

» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்
by Admin Wed Aug 24, 2011 9:22 am

» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
by Admin Tue Aug 16, 2011 7:28 pm

» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365
by anbu Sat Aug 06, 2011 9:44 am

» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search
by anbu Sat Aug 06, 2011 9:42 am

» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா?
by Admin Sun Jul 31, 2011 10:28 pm

» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.
by Admin Sun Jul 31, 2011 10:23 pm

» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா? அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller
by Admin Sun Jul 31, 2011 10:07 pm

» Daniusoft DVD to MP4 Converter வேகமாக Converter செய்யும் ஒரு மொன்பொருள்.
by Admin Sun Jul 31, 2011 10:04 pm

» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:
by Admin Sun Jul 31, 2011 9:57 pm

» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்!!!
by Admin Sun Jul 31, 2011 9:52 pm

» மனைவிகள் இலவசம்
by Admin Sun Jul 31, 2011 9:48 pm

» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
by Admin Sun Jul 31, 2011 9:47 pm

» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!
by Admin Sun Jul 31, 2011 9:46 pm

» இது இலவச மருத்துவமனை !!!?
by Admin Sun Jul 31, 2011 9:45 pm

» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.
by Admin Sun Jul 31, 2011 9:44 pm

» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!
by Admin Sun Jul 31, 2011 9:43 pm

» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!
by Admin Sun Jul 31, 2011 9:42 pm

» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்?
by Admin Sun Jul 31, 2011 9:41 pm

» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க?
by Admin Sun Jul 31, 2011 9:40 pm


சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் சுவாமியின் மனு ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Go down

சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் சுவாமியின் மனு ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Empty சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் சுவாமியின் மனு ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Post by Admin Thu May 19, 2011 10:58 am

புது தில்லி, மே 18: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய
அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக்கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான
விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் மத்திய
தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும், அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த
ப.சிதம்பரமும் சேர்ந்துதான் எடுத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் ராசா மீது அனைத்து
குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளது.
எனவே இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க
வேண்டும் என்று கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணை நீதிமன்றம் முன் புதன்கிழமை வந்தது. இதில் சுவாமி
முன்வைத்த விவாதம்: 2ஜி முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா
உள்ளிட்ட சிலர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் சிக்காமல் பலர்
வெளியே உலவிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இந்த விவகாரத்தில்
தொடர்பு உள்ளது. எனவே அவர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். ஆ.ராசா மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒடுக்கீட்டுக்கான அனுமதி
வழங்கப்பட்டது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் தொடர்பான தடையில்லாச்
சான்றிதழ்களை மத்திய நிதி அமைச்சகம்தான் வழங்கியிருக்கிறது. அப்போது மத்திய
நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம் என்பதால், அவரது அனுமதியின்றி தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு, துறை ரீதியிலான ஒப்புதல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இந்தப்க்
தகவலை சிபிஐ மூடி மறைத்துவிட்டது.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதால் அவர்களை
விசாரிக்க சிபிஐ தயக்கம் காட்டுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறேன்.
எனவே எனக்குத் தெரிந்த ஆதாரங்கள், ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முன் அளித்து சிறப்பு
வழக்கறிஞராக வாதாட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது. நான் அளித்திருந்த புகாரில் தேசியப் பாதுகாப்பு குறித்து பல்வேறு
அம்சங்களைத் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்தக் கோணத்தில் சிபிஐ விசாரணை
மேற்கொள்ளவேயில்லை. எனவே இந்தப் புகார் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று
அவர் வாதாடினார்.
சிறப்பு வழக்கறிஞராக தன்னை நியமிக்க வேண்டும் என்கிற சுவாமியின் கோரிக்கைக்கு
சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில்
சுப்பிரமணியன் சுவாமியை எந்த அடிப்படையில் வாதாட அனுமதிப்பது என்பதை ஆராய வேண்டும்
என்று நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தான் வெளிநாடு செல்லவிருப்பதால், மீண்டும் இந்தியா
திரும்பியவுடன் தன் வசம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி
கோரினார் சுவாமி.
இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி சைனி, மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26-ம்
தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Admin
Admin
Admin

Posts : 336
Join date : 17/03/2011

https://eelam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum